வெளிநாட்டில் இருந்து வந்த கணவன் !!ஆசை நிறைவேறாததால் உயிரை மாய்த்துக்கொண்ட மனைவி !!

இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது ஆசைப்படி காதலித்த நபரோடு சேர்ந்து வாழ முடியாத காரணத்தால் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.ராஜேஷ் – வசந்தகுமாரி தம்பதியினருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ், வசந்தகுமாரியை திருமணம் செய்த பிறகு, வெளிநாட்டிற்கு சென்று சில வருடங்களாக வேலை பார்த்து வந்தார்.

அந்த சமயத்தில் சுரேஷ்குமாருக்கும், வசந்தகுமாரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.இந்த கள்ளக்காதல் விவகாரம் அரசல், புரசலாக வெளிநாட்டில் வேலை பார்த்த ராஜேசுக்கு தெரியவந்தது. இதனால் அவர், வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பி மனைவி, மகனுடன் வசித்தார்.

மீண்டும் வெளிநாட்டுக்கு செல்லாமல், இங்கேயே பொக்லைன் எந்திர டிரைவராக வேலை பார்த்தார். இதனால் தான் ஆசைப்படி கள்ளக்காதலனை சந்தித்து பேசுவதற்கு கணவர் இடையூறாக இருக்கிறார் என வசந்தகுமாரி கவலை கொண்டுள்ளார்.

சுரேஷ்குமார் இல்லாமல், தன்னால் வாழ முடியாது என்ற நிலைக்கு வசந்தகுமாரி தள்ளப்பட்டார். கணவர் ராஜேஷ் மற்றும் மகன் அஸ்விந்த் ஆகியோரை மறக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்காதலன் சுரேஷ்குமாருடன் சென்று விட்டார்.

இருப்பினும், பொலிசாரின் உதவியுடன் இவர்களை பிரித்து, தனது மனைவியை அழைத்து வந்த ராஜேஷ், 2 நாட்கள் அமைதியாக இரு, நாம் சேர்ந்து வாழ்வோம் எனக்கூறி மனைவியை அவரது சகோதரர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.சகோதரர் வீட்டுக்கு சென்ற அவர் மாலையில் வீட்டை பூட்டிக்கொண்டு திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அறிந்த தக்கலை பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வசந்தகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்ந்ததை பிரித்ததால் வசந்தகுமாரி தற்கொலை செய்து கொண்டதாக போலீசின் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.